Browsing author

Suresh

‘ஓஹோ எந்தன் பேபி’ படம் குறித்து விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..

விஷ்ணு விஷாலின் தம்பி ஹீரோவாக அறிமுகமாகிறார். இது குறித்துக் காண்போம்.. ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஜோடியாக மிதிலா பால்கர் இணைந்துள்ளார். இப்படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, ‘இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை […]

ஒரு சீனுக்காக ரூ. 4.5 கோடி என்பது அதிகம்: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது. தற்போது இப்படம் பற்றி வைரலாகும் தகவல் பார்ப்போம். விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் இல்லை. அப்படத்தில் ‘குட் டச் பேட் டச்’ பற்றி பாலகிருஷ்ணா பேசிய காட்சியை மட்டும் தான் ‘ஜனநாயகன்’ படத்தில் வைத்திருக்கிறார்கள். இதனால் முறைப்படி, அந்த ஒரு காட்சியை எடுத்துக் கொள்ள ‘பகவந்த் கேசரி’ பட குழுவை அணுகி, அதன் உரிமத்தை ரூ. 4.5 கோடிக்கு வாங்கி […]

‘தக் லைஃப்’ படம் ரிலீஸ் தொடர்பாக, கமல்ஹாசன் நீதிமன்றத்தில் வழக்கு..

கமல் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் வெளியீடு தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘கன்னட மொழி தமிழ் மொழியிலிருந்து உருவானது’ என்ற கருத்தை கமல்ஹாசன் தெரிவித்ததைத் தொடர்ந்து சர்ச்சையானது. இதனால் அவர் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகாவில் வெளியிடக் கூடாது என கன்னட திரையுலகம் மற்றும் கன்னட அமைப்புகள் தடை விதித்துள்ளன. கன்னடர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந்தேதி வெளியாகவுள்ள […]

இன்று இளையராஜா பிறந்த நாள்; இந்நாளிலும் அவரை சீண்டலாமா?

‘இசைஞானி’ இளையராஜா சுமார் 8,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 1,500-க்கும் அதிகமான படங்களுக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்கிற பெருமையையும் இளையராஜா பெற்றுள்ளார். இளையராஜா திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டும், லண்டனில் அவர் சிம்பொனி இசையமைத்ததை பாராட்டியும் தமிழக அரசு சார்பில் இன்று (ஜூன் 2) பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த பாராட்டு விழா […]

45 கதாபாத்திரங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர்..

‘ஆராணு ஞான்’ பட நடிகர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ படம் ஜுன் 5-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக, கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ‘தசாவதாரம்’ படத்தில் பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர், ஆங்கிலேயர், வயதான பாட்டி என 10 கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். மிகவும் பாராட்டுகள் […]

உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது: நயன்தாரா மீது தனுஷ் ஆவேசம்?

நயன்மீது தனுஷ் சூசகமாய் ஆத்திரமடைந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. நயன்தாரா தனது ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்திற்காக நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி இருக்கிறார் நயன்தாரா. ஆனால், தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. பின்னர், அந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதற்கு […]

சினிமாவை விட்டு போய்விடலாம் என்று யோசித்தேன்: நடிகர் உதயா நம்பிக்கை பேச்சு..

உதயா நடித்துள்ள ‘அக்யூஸ்ட்’ படம் பற்றிப் பார்ப்போம்.. உதயா, அஜ்மல் ஆகியோருடன் யோகிபாபு நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இப்படத்தை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா ஹீரோயினியாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசுகையில், உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது’ என்றார். பின்னர் உதயா பேசும்போது, ‘ஒரு […]

‘தக் லைஃப்’ டிரெய்லர் முத்தக்காட்சி சர்ச்சை: அபிராமி, திரிஷா விளக்கம்..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ டிரெய்லரில் கமல்-அபிராமி இடையேயான முத்த விவகாரம் சர்ச்சையாகி தொடர்கிறது. இந்த வயதில் லிப் டூ லிப் முத்தம் எல்லாம் தேவையா? என வலைதளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் முத்தக் காட்சி பற்றி அபிராமி விளக்கம் கொடுத்திருக்கிறார், ‘தற்போது எல்லாம் இது தான் என்று இல்லாமல் எது வேண்டுமானாலும் சர்ச்சை ஆகிறது. மணி சாரின் லாஜிக்கை நான் கேள்வி கேட்க மாட்டேன். அவரின் லாஜிக்கை அப்படியே ஏற்கிறேன். தக்லைஃப் படத்தில் எனக்கு ஸ்டிராங்கான, […]

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்துக்காக சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் லுக்..

மதராஸி, பராசக்தி ஆகிய படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இப்படம் ஹார்பரில் நடக்கும் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரில்லர் படமாக உருவாகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் லுக் பார்க்கையில், போலீஸ் கெட்டப்பில் நடித்துள்ளார் என தெரிகிறது. இலங்கையில் நடைபெற்ற படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இந்த லுக்கில் நடித்திருக்கலாம் என கணிக்கப்படுகின்றது. சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘குட்நைட்’ முகழ் விநாயக் சந்திரசேகர் […]

நடிகர் நானியிடம் எஸ்.ஜே.சூர்யா மன்னிப்பு கேட்டார்; எதற்கு தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் செயல் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது. இது பற்றிய நிகழ்வுகள் காண்போம்.. கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ‘சரிபோதா சனிவாரம்’ படம் பெரும் வெற்றி பெற்றது. விவேக் ஆத்ரேயா இயக்கிய இந்த ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் நானி ஹீரோவாகவும், பிரியங்கா மோகன் ஹீரோயினாகவும் நடித்தனர். இதில் எஸ்.ஜே.சூர்யா ஏற்று நடித்த ஊழல் போலீஸ் அதிகாரி கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் வில்லனாக சிறப்பான நடிப்புக்கு எஸ்.ஜே. சூர்யாவுக்கு தெலங்கானா அரசு கத்தர் திரைப்பட விருதை வழங்கியது. […]