Browsing author

Suresh

கவின் நடிப்பில் கிஸ், மாஸ், படங்களை தொடர்ந்து அடுத்த படப்பூஜை..

கவின் நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. மேலும், வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு உள்ளன. ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ளார். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் […]

ரஜினி சாரை ரொம்ப ‘மிஸ்’ செய்கிறோம்: ‘கூலி’ படக்குழுவினர் நெகிழ்ச்சி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், உயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்தைப் பற்றியும் ரஜினிகாந்த் பற்றியும் பேசுகையில், ‘கூலி படப்பிடிப்புத் தளத்தில் ரஜினி சாரை ரொம்ப மிஸ் பண்றோம். அவருடைய போர்ஷன்ஸ் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 4 மாதங்களாக நாங்கள் ரஜினி சாரை மிஸ் செய்து வருகின்றோம். எனவே, டைம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயிலர் 2 படப்பிடிப்பிற்கு சென்று ரஜினி சாரை பார்த்து […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ போஸ்டர் உலகளவில் ரீகிரியேட்: படக்குழு & ஃபேன்ஸ் உற்சாகம்..

தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் வேன் மீது நின்று செல்ஃபி எடுப்பது போன்று வடிவமைத்து வெளியிட்டார்கள். இது நிஜத்தில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது நடந்தது என்பது நினைவுகூரத்தக்கது. இருப்பினும், இந்த ‘ஜனநாயகன்’ போஸ்டருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் விம்பிள்டன் நிர்வாகம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற ஜன்னிக் சின்னருக்கு ‘ஜனநாயகன்’ போஸ்டர் பாணியில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். […]

‘தலைவன் தலைவி’ படத்தின் கதை என்ன?: இயக்குநர் பாண்டிராஜ் அப்டேட்ஸ்..

‘தலைவன் தலைவி’ படத்தின் கதைக்களம் குறித்துப் பார்ப்போம்.. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தலைவன் தலைவி’. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படம் குறித்து பாண்டியராஜ் தெரிவிக்கையில், ‘தலைவன் தலைவி’ படத்தில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறோம். இன்று விவகாரத்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வி தான் இந்தக் கதை. விவகாரத்து பெறுவதற்கு எண்ணம் இருந்தாலோ, நீதிமன்றத்துக்கு சென்றிருந்தாலோ இந்தப் படம் பார்த்தவுடன் விவகாரத்து […]

‘கூலி’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி ஸ்ருதிஹாசன் தகவல்-வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் ரஜினிக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் என பலர் நடித்துள்ளனர். அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி தெறிக்கிறது. ‘என் தந்தையும் (கமல்ஹாசன்) ரஜினிகாந்தும் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்கள், தமிழ் சினிமாவின் முகங்களாக இருப்பவர்கள். ரஜினிகாந்தை, […]

விஜய் சேதுபதிக்கு வில்லியாக வருகிறார் தபு..?

விஜய் சேதுபதி, தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தபு, சம்யுக்தா, துனியா விஜய் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சமீபத்தில் தொடங்கியது. இதில், தபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்நிலையில், அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. வழக்கமான வில்லியாக இல்லாமல் அவரது கேரக்டர் புதுமையாக உருவாக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, இப்படம் […]

சூர்யா பிறந்தநாளில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்..?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 45-வது படமான ‘கருப்பு’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் தனது 46-வது படத்தில் தற்போது இணைந்துள்ளார். இந்நிலையில், சூர்யாவின் 47-வது படத்தை பகத் பாசிலை வைத்து ‘ஆவேஷம்’ என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனரான ஜீத்து மாதவன் இயக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லாலும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மோகன்லால், சூர்யாவுடன் ‘காப்பான்’ படத்தில் இணைந்து நடித்தார். தற்போது மீண்டும் ‘சூர்யா 47’ படத்தின் […]

ரசிகர்கள் என்னை மறக்கவில்லை: நடிகை ஜெனிலியா செம குஷி..

அமீர்கான் நடித்து வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ படம் ரிலீஸான 24 நாட்களில் ரூ.155 கோடி வசூல் செய்திருக்கிறது. அவருக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியாவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், அமீர்கான் படத்தில் அவர் நடித்தது பற்றிய சுவாரஸ்ய நிகழ்வு காண்போம்.. ஜெனிலியாவின் கணவரான நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை தற்செயலாக பார்த்திருக்கிறார் அமீர்கான். உடனே அவரை அணுகி உங்கள் மனைவி ஜெனிலியா தற்போதும் படங்களில் நடிக்கிறாரா? என கேட்டிருக்கிறார். ஆமாம்ஜி என கூறியிருக்கிறார் ரித்தேஷ். […]

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]

‘காவாலா’ பாடலை முறியடித்து ‘மோனிகா’ பாடல் சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ‘மோனிகா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. மற்ற மொழிகளிலும் ‘மோனிகா’ பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகின்றது. முன்னதாக, விஜய்யின் அரபிக்குத்து, ரெட்ரோ படத்தில் கனிமா ஆகிய பாடல்களில் பூஜா ஹெக்டே தன் முழு நடன திறனையும் நிரூபித்தார். அதுபோல மோனிகா […]