Boomer Man Official Trailer
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek Saro| SR Prabu
Browsing author
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek Saro| SR Prabu
Vel Sevvel Lyrical Video | Arulvaan | Arulnithi, Aarav | GV Prakash Kumar | Ganesh Vinayakan
பன்முகத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் பகத் பாசில், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அணியுடன் இணைந்துள்ள புதிய திரைப்படம் ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’. வித்தியாசமான கற்பனை உலகை மையமாகக் கொண்ட இப்படம் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. Showing Business நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா, ‘பாகுபலி’ படங்களை தயாரித்த Arka Media Works நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி ஆகியோரும் […]
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான ‘Welcome to Wildlife’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘திருடன் போலீஸ்’, ‘Ninu Veedani Needanu Nene’, ‘Single’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இந்தப் படத்தை இயக்குகிறார். KVK Productions நிறுவனத்தின் சார்பில் குடிபுடி விஜய் குமார் தயாரிக்கும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் […]
இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான 60வது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்கு கிடைத்த மூன்றாவது ஞானபீட விருது என்ற பெருமையும் கிடைத்துள்ளது. டெல்லியில் ஜூலை 13 அன்று நடைபெற்ற விழாவில், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் விழாவில் கலந்து கொண்டனர். விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு பேசிய வைரமுத்து, தனது சிறுவயது நினைவுகளை பகிர்ந்து […]
தமிழ் இலக்கியத்திலும், திரையுலகிலும் தனித்துவமான முத்திரை பதித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 1980-ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான வைரமுத்து, “இது ஒரு பொன்மாலைப் பொழுது” பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதியுள்ள […]
நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்த ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 46-வது படமான ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ மூலம் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. […]
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், நடிகர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு படத்தின் உருவாக்கம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இயக்குநரும் கதாநாயகனுமான பாரி இளவழகன், பெரம்பூரை பின்னணியாகக் கொண்டு, வெவ்வேறு கலாச்சாரத்தைச் சேர்ந்த இருவரின் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ள நிலையில், ரோஜா, […]
Don’t Trouble the Trouble – Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti
Train Official Teaser | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu