Browsing author

Suresh Kandasamy

83 வயதிலும் குறையாத இசைத் தேடல்… 2,000 கி.மீ பயணம் செய்த இளையராஜா!

மராத்தி மொழியில் உருவாகி, ஆஸ்கர் விருதுக்கான பயணத்தில் இடம்பெற்றுள்ள ‘கோந்தல்’ (Gondhal) திரைப்படத்திற்காக இசைஞானி இளையராஜா மேற்கொண்ட தனித்துவமான முயற்சி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சந்தோஷ் தவக்கர், ‘வெரைட்டி இந்தியா’ (Variety India) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இளையராஜா படத்திற்காக இசையமைத்த விதம் குறித்த சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “83 வயதான இசையமைப்பாளர் இளையராஜா, கோந்தல் கலை மற்றும் அதன் இசை மரபுகளை நேரில் அறிந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து மகாராஷ்டிராவின் நாசிக்கில் […]

‘பிக்பாஸ்’ புகழ் ஓவியா நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்

ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனத்தின் சார்பில் ராஜாபிரபு தயாரிப்பில், சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘கிளிக்’ (Click). இப்படத்தில் ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளரான ராஜாபிரபுவே இப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இளமைத் துள்ளல், சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, இன்றைய தலைமுறையினரைக் கவரும் வகையில் ஜென் சி (Gen Z) பின்னணியில் […]

தேஜய் அருணாசலம் – திவிஜா பிரபாகர் நடிக்கும் புதிய படம்!

‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ், தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தேஜய் அருணாசலம் கதாநாயகனாக நடிக்க, திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான முழுமையான குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வாலி […]

O.M Trailer

O.M Trailer | Dhanush | Mammootty | Sai Pallavi | Sreeleela | Rajkumar Periasamy | Sai Abhyankkar

காளிதாஸ் ஜெயராமின் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், இயக்குநர் அஹம்மது கபீர் இயக்கியுள்ள காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படம் ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns). இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வ போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் இப்படத்தை வெளியிடுகிறார். காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் […]

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான தமிழ்ப் படம் ‘அறிவு’!

Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), இந்தியன் பனோரமா ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இதன் மூலம், சர்வதேசத் திரைப்பட அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் படைப்பாக ‘அறிவு’ கவனம் பெற்றுள்ளது. சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் […]

ஒரே இரவில் நடக்கும் கதை ‘ஸ்டேஷன்’

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP Infotainment) சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்குகிறார். காதல், குற்றம், அதிரடி என மூன்று […]

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘செங்குலம்’ பட டைட்டில் லுக் வெளியானது

கண்ணன் ரவி குழுமம் சார்பில் பிரம்மாண்டமாகத் தயாராகும் புதிய திரைப்படத்தில் கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். வெளியாகியுள்ள டைட்டில் போஸ்டரில் ரத்தம் தோய்ந்த வேல்கம்பு, […]

ஷாருக்கானின் ‘கிங்’ படத்தின் து மில் ஜாயே பாடலுக்கு முதலிடம்!

ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியானது முதலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இப்பாடல், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, பாடலின் ஹுக் ஸ்டெப்பை மையமாகக் கொண்டு ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். இசை ஸ்ட்ரீமிங் […]