The Rage Lyric Video
The Rage Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K Raj | AGS Entertainment
Browsing author
The Rage Lyric Video | Blast | Arjun | Ravi Basrur | Subash K Raj | AGS Entertainment
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. பல்வேறு தடைகளை கடந்து இன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம். சென்னையின் ஏழுகிணறு பகுதியில் உள்ள நீதிமன்றத்தை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. அங்கு செல்வாக்கு மிக்க வழக்கறிஞராக இருப்பவர் பேபி கண்ணன் (ஆர்.ஜே. பாலாஜி). சட்டத்தின் மூலம் நீதி தேடி வரும் சாதாரண மக்களிடம் பணம் பறிப்பதும், அதிகாரம் உள்ளவர்களை காப்பாற்றி லாபம் அடைவதும் […]
Watcha Udadha Video Song | Parimala and Co | Sandy | Sanjana | Ananthika | Pandiraaj | Foxn
இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தனது முதல் சர்வதேச விநியோக முயற்சியாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்கள் மூலம் இந்திய சினிமாவின் தரத்தையே மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது வெளிநாட்டு விநியோகத் துறையிலும் தனது தடத்தை பதிக்கத் தயாராகியுள்ளது. சமீபத்தில் சர்வதேச விநியோகத்தில் களமிறங்க இருப்பதாக அறிவித்திருந்த நிறுவனம், அதன் முதல் அதிகாரப்பூர்வ முயற்சியாக ‘பெத்தி’ […]
நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தனது முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடலான ‘வேலும் மயிலும்’ பாடலை வெளியிட்டு, சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது. முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் இந்த இசைப் படைப்பை இயக்கியுள்ளார். புதிய கதைகள் மற்றும் திறமைகளை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வரும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், […]
குடும்பங்கள் திரையரங்குகளில் கொண்டாடி ரசிக்க இருக்கும் இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு சென்சார் வாரியம் ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. மனித உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த உணர்வுப்பூர்வமான திரைப்படம், நல்ல கதையம்சத்துடன் குடும்ப பார்வையாளர்களை கவரும் வகையில் தயாராகியுள்ளது. மண் மணம் மிக்க கதையையும், உணர்ச்சிகளைத் தொட்டுச் செல்லும் திரைக்கதையையும் கொண்ட இப்படம், சென்சார் பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. மேலும், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளதாக சென்சார் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளதாக […]
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பாராட்டுகளை குவித்து வருகிறது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கும் இப்படத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ளார். தடகள விளையாட்டை மையமாகக் கொண்ட இப்படம், விளையாட்டு வீரர்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் அங்கீகாரத்திற்கான போராட்டத்தை உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது. வெளியான டிரெய்லரில், தனது உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடும் தடகள வீரரின் காட்சிகள் மற்றும் வலுவான […]
‘வடசென்னை 2’ படம் குறித்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த அப்டேட்டை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளார். சன் நெக்ஸ்டில் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடன் உரையாடிய அவர், ‘வடசென்னை 2’ தொடர்பான தகவலை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ‘வடசென்னை’ படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் நடத்திய ஆடிஷன் அனுபவத்தையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இரண்டு நிமிடங்கள் இடைவிடாமல் கெட்ட வார்த்தைகள் பேச சொல்லப்பட்ட சவாலான தருணத்தை […]
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம் ‘லவ் பைட்’ உருவாகி வருகிறது. செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் இந்த படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார். மேலும் ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவை கலந்த சர்வைவல் திரில்லராக உருவாகும் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தை […]
‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கலை, கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் சினிமா ஒன்றிணைந்த கொண்டாட்டம் ரசிகர்களை கவர்ந்தது. ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு மற்றும் தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பை முன்னிட்டு ரவி மோகன் இந்த உயரிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். விருதுடன் ₹1,00,001 பணப் […]