இளம் முன்னணி நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம், காதல் கதைக்களத்துடன் அழகான உணர்வுகளையும் இணைத்து, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.
படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- Advertisement -
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான ‘ஆசை வரமே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ‘அன்பில் அவன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் காதல் கொண்டாட்டமாக ‘அன்பில் அவன்’ வெளியாகிறது.