குட் நியூஸ் சொன்ன அனிதா சம்பத்.. குவியும் வாழ்த்து..!

அனிதா சம்பத் குட் நியூஸ் ஒன்றைச் சொல்லியுள்ளார்.

anitha sambath house warming ceremony photos

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கியவர் அனிதா சம்பத். பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில படங்களிலும் செய்திவாசிப்பாளராக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோ மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதுமனை புகுவிழா புகைப்படங்களை வெளியிட்டு அதில் நம்ப இரண்டாவது வீடு என் அம்மாவுக்காக என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அனிதாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர்.

மேலும் உங்க அன்பு இல்லாம எங்க வளர்ச்சி சாத்தியமே இல்லை என்று வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

 

anitha sambathanitha sambath house warming ceremony photosceremonyhouse warmingphotosஅனிதா சம்பத்உலகநாயகன் கமல்ஹாசன்குட் நியூஸ்புதுமனை புகுவிழா