அமரன் படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
amaran movie 11 days collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் ஜிவி பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்திருந்தார்.
வசூல் வேட்டையாடி வரும் இந்தத் திரைப்படம் 11 நாளில் 242 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
amaran movie 11 days collection update