‘தல’ அஜித்தின் 64-வது படத்திற்கான நியூ லுக் ஒத்திகையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இது குறித்துப் பார்ப்போம்..
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லீ’ படத்தின், டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஜித், பல கெட்டப்பில் தெறிக்கவிட்டிருந்தார்.
மேலும், படத்தின் கதைக்களம் குறித்து வந்த தகவலின்படி, “கெட்டவனாக வாழும் அஜித், நல்லவனாக வாழ முயற்சிக்கும் நிலையில், அவர் எதிர்கொள்ளும் பிரச்சினையே படத்தின் கதைக்களம்” ஆகும். படத்தில் ரசிகர்களை கவரும் மாஸ் ஃபைட், பைக் சேசிங் மற்றும் ஃபேமிலி சென்டிமெண்ட் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித் தனது 64-வது படம் பற்றி அக்டோபர் மாதத்திற்கு மேல் தான் முடிவெடுப்பார் என சொல்லப்படுகிறது. ஏனெனில், அவர் அதற்கிடையே தீவிர கார் ரேஸ் பயிற்சியில் கலந்துகொள்ள உள்ளார்.
துபாயில் நடந்த 24 மணிநேர கார் ரேஸில் 3-வது இடம் பிடித்த அஜித் அணி, சமீபத்தில் இத்தாலியில் நடந்த கார் ரேஸிலும் 3-வது இடம் பிடித்து இந்தியாவை பெருமைப் பட வைத்தார்.
எப்போதும் பயிற்சியில் இருப்பதால், அஜித்தின் புகைப்படங்கள் கூட எதுவும் வலைத்தளத்தில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அஜித் கிளீன் ஷேவ் செய்து, நியூ லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதனால், ‘தல’ அஜித்தின் தீவிர ரசிகர்கள்..
இந்த புகைப்படம் ‘தல’ நடிக்கும் 64-வது படத்திற்கான நியூ லுக்கிற்கு முன்னோட்டமாக இருக்குமோ? படத்தை அண்மையில் சந்தித்த விஷ்ணுவர்தன் தான் இயக்குகிறாரோ? இயக்கினால் அது நூறு பில்லாவாக உருவாகுமோ? என்றெல்லாம் பலவாறு கருத்து தெரிவிப்பதும் வைரலாகி வருகிறது. விடையென்னவோ.. அக்டோபரில் பார்க்கலாம்.!