சிம்பிள் புடவையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மனதில் இடம் பிடித்தார். சில மாதங்களுக்கு முன் அவருக்கு கங்கை நதி கரையோரம் திருமணம் நடந்து முடிந்த நிலையில் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.