மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நயன்தாரா போட்ட பதிவு..!

மகன்களுடன் இருக்கும் புகைப்படத்துடன் நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

actress nayanthara latest post update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு உலக் ,உயிர் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

படம் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் கணவர் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை எப்போதும் தவிர்ப்பதில்லை. இந்நிலையில் தனது குழந்தைகளுடன் இருக்கும்போது எடுத்த சில போட்டோக்களை வெளியிட்டு, அதில் என் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் உங்கள் இருவரையும் தேர்ந்தெடுப்பேன் என்று பதிவிட்டு உள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Actress Nayantharaactress nayanthara latest post updatelatest postupdateஉயிர்உலக்நயன்தாராமூக்குத்தி அம்மன் 2