நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை பாவனா நடித்த ‘அனோமி’ பட அப்டேட்ஸ்..

தமிழ் சினிமா ரசிகர்களிடயே நடிகை பாவனா கவனத்தை ஈர்த்தது. ஆனால், சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகிய இருந்தார். இந்நிலையில், மலையாள சினிமாவில் பாவனா ‘அனோமி’ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்துள்ளார். ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தில் ஷெபின் பென்சன், த்ரிஷ்யா ரகுநாத், பினு பப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிப்.6-ந்தேதி இப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் பாவனா தெரிவிக்கையில், ‘மலையாள சினிமாவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று திடீரென்று தோன்றியதால் சில வருடங்களாக நடிக்கவில்லை. ஒருவேளை அது அவசர முடிவாக இருக்கலாம். ஆனால், அதை நிம்மதியாக உணர்ந்தேன். அப்போதும், மலையாள சினிமா நண்பர்கள் சிலர் தொடர்ந்து என்னை நடிக்க அழைத்தனர். கதையை மட்டுமாவது கேளுங்கள் என்றும் சொன்னார்கள்.

ஆஷிக் அபு, பிருத்விராஜ், ஜெயசூர்யா, ஒரு மம்முட்டி படம் என வாய்ப்புகள் வந்தன. ஆனால் மறுத்து விட்டேன். ஏன் மறுத்தேன் என்பதற்கு உண்மையில் பதில் இல்லை. ஆனால் நான் அதில் திருப்தியாக இருந்தேன். தொடர்ந்து கன்னடப் படங்களில் நடித்தேன். என் வசதியான வட்டத்துக்குள் இருந்ததில் நிம்மதியாக உணர்ந்தேன்’ என கூறியுள்ளார்.

actress bhavana act in anomeie movie images 1200

 

actress bhavanalifestoryநடிகை பாவனாபிருத்விராஜ்