அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சூரி பதிவு ஒன்று போட்டுள்ளார்.
காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் சூரி. சமீபத்தில் இவரது நடிப்பில் மாமன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதாவது அவரைப் பார்த்து நொடியிலேயே புரிந்தது உண்மையின் வெற்றி உருவாக்கப்படுவது அல்ல அது தினமும் உழைப்பாலும் மனவலிமையாலும் சம்பாதிக்கப்படுவது அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.