சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா இணையும் படத்திற்கு புதிய டைட்டில் ‘1965’ ?

சென்டிமென்ட் டச் என்பது சினிமாவில் அதிகம். அவ்வகையில், ‘எஸ்கே 25’ படத்தின் புதிய டைட்டில் குறித்த விவரம் பார்ப்போம்..

இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வெற்றிப்படங்களை கொடுத்த சுதா கொங்கரா, தற்போது ‘எஸ்கே 25’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்து, தமிழ்த்திரைக்கு அறிமுகமாகிறார். படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும், முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாவும் நடிக்கின்றனர்.

சூர்யா நடிப்பதாக இருந்த இப்படத்திற்கு, முதலில் ‘புறநானூறு’ என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இப்படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக உள்ளது என கருதி, சூர்யா விலகியதையடுத்து, சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். படத்தில் இசையமைக்கும் ஜி.வி 100-வது திரைப்படம் ஆகும்.

இந்நிலையில், ‘எஸ்.கே.25’ படத்தின் தலைப்பு ‘புறநானூறு’ இல்லை எனவும் ,வேறு தலைப்பு வைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

அவ்வகையில், இப்படம் 1965-ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதால், இப்படத்திற்கு 1965 என பெயரிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. முன்னதாக, மலையாளத்தில் 2018 என வருடத்தின் தலைப்போடு வந்த திரைப்படம் ஹிட் ஆனதை வைத்து,1965 என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும், தமிழ்த்திரையில் விஜய் சேதுபதி நடிப்பில் 96 படம் வெளியாகி வென்றதும் நினைவுகூரத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

actor sivakarthikeyan and sudha kongara movie news title
actor jayam raviactor sivakarthikeyandiector sudha kongaraவிஜய் சேதுபதிஸ்ரீலீலா