சர்தார்-2 பட பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இது குறித்த அப்டேட் பார்ப்போம்..
பிரேம்குமார் இயக்கிய ‘மெய்யழகன்’ படத்தை தொடர்ந்து ‘சர்தார்’ படத்தில் கார்த்தி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்களால் கலவையான விமர்சனம் பெற்றது.
தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சர்தார்’ படம் வரவேற்புக்கு உரிய வகையில் அமைந்ததால், இயக்குனர் மித்ரன் 2-ம் பாகத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
இப்படத்தின் ஷூட் நடைபெறும்போது கார்த்தியின் காலில் காயம் ஏற்பட சில நாட்கள் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதுவரை நேரத்தை வேஸ்ட் செய்ய விரும்பாத படக்குழு படத்தின் அடுத்த கட்ட பணிகளை தொடங்கி விட்டனர். அதாவது, படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கி உள்ளனர்.
முன்னதாக, பாலிவுட்டில் வெளியான ‘சாவா’ படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சியின்போது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அப்படத்தின் புரொமோஷனில் வீல்சேரில் அமர்ந்தவாறு வந்து கலந்து கொண்டார்.
அதுபோல, டப்பிங் பணியில் கார்த்தியும் முயற்சி செய்யலாமே என்கின்றனர் நெட்டிசன்ஸ்.
இதற்கு ‘அவரவர் வலி அவரவருக்கே தெரியும். சர்தார் செம எனர்ஜியாய் வருவார் வெயிட்டிங்’ எனவும் கார்த்தி ஃபேன்ஸ் பதில் தெரிவித்துள்ளனர்.