சூப்பர் ஸ்டாரிடம் கற்றுக்கொண்ட ஸ்ருதிஹாசனுக்கு, ரசிகர்கள் விண்ணப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம், நிறைய கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார் ஸ்ருதி ஹாசன். இது குறித்த கலையார்வம் பார்ப்போம்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தின் முதல் கட்ட ஷூட் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட் சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ஜெய்ப்பூரில் நடைபெற்றது. படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என கூறப்பட்டது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘கூலி’ படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் நடிப்பது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும் போது, ‘கிறிஸ்துமஸ் தினத்திலும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறேன். கடந்த வருடம் தெலுங்கு ‘கிராக்’ படப்பிடிப்பில் இருந்தேன். பிறந்த நாள் மற்றும் பண்டிகைகளின்போது ஷூட்டிங்கில் இருப்பது நன்றாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.

லோகேஷ் கனகராஜ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அவர் படங்கள் எனக்குப் பிடிக்கும். அது, ‘கூலி’ படத்தில் நிறைவேறி இருக்கிறது. இதில் ரஜினியுடன் நடிப்பது, எனக்கு சிறந்த அனுபவம். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்ஸ், ‘ரஜினி சாரிடம் கற்றுக் கொண்டவைகளில் ஏதேனும் ஒன்றோ இரண்டோ சொல்லுங்கள் ஸ்ருதி.. ரசிகர்களும் எனர்ஜியாய் ஆகிறோம்’ என விண்ணப்பித்து வருகின்றனர்.

actress shruti haasancoolie movierajini kanthசத்யராஜ்லோகேஷ் கனகராஜ்