அஜித் 64.. அப்டேட்களை வாரி வழங்கிய ஆதிக் ரவிச்சந்திரன்.!!

அஜித் 64 படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது

aadhik ravichandran update for ajith 64 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் சம்பவமாக எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி தற்போது தொடர்கிறது அதாவது அடுத்த படமான அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது தொடர்ந்து அஜித் கார் ரேஸில் பிஸியாக இருந்து வரும் நிலையில் தற்போது அஜித் 64 படம் குறித்த அப்டேட்டை ஆதிக் பகிர்ந்துள்ளார்

அதாவது ஏற்கனவே ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து முடிவுக்கு போவதாகவும் லொகேஷன் பார்த்து கிட்டு இருக்கோம் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடவும் எனவும் கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இந்த படம் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் இவர் கூறிய இந்த பேச்சு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரிக்க செய்துள்ளது மேலும் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வருகிறது.

aadhik ravichandran update for ajith 64 movie
Aadhik Ravichandranaadhik ravichandran update for ajith 64 movieajith 64 movieupdateஅஜித் 64அஜித் குமார்குட் பேட் அக்லி