தளபதி விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் ’69-வது படமாக’ நடித்து வருவதே தனது கடைசிப்படம் என அறிவித்திருந்தார்.
பின்னர், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று முழுநேர பணியாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டு, தற்போது தவெக மாநாடும் வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளிலும் விஜய் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டுக்கு தன்னை விஜய் அழைக்கவில்லை என்றாலும் வருவேன் என்றார் நடிகர் விஷால். இதனால், இவரைத் தொடர்ந்து ‘தல’ அஜீத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து பார்ப்போம்..
விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் தளபதி 69 திரைப்படம் அரசியலைப் பற்றி பேசும் படம். இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பது தான் தளபதி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில், ஒருபக்கம் விஜய் தளபதி 69 படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நிலையில், மறுபக்கம் அவர் தனது அரசியல் கட்சி மாநாடு வேலைகளிலும் பிசியாக இருக்கின்றார்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற தன் அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த விஜய், 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால், தளபதி 69 படத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார் விஜய்.
ஒரு படத்திற்கு 250 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகின்றார் விஜய். அவரின் படங்கள் ஒவ்வொன்றும் புது புது வசூல் சாதனைகளை செய்து வருகின்றது. அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் தவம் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு தன் திரைப்பயணத்தில் மிக உயரத்தில் இருக்கும் விஜய், நடிப்பில் இருந்து விலகி அரசியலில் களமிறங்குகிறார் என்றால், அதெல்லாம் மிகப்பெரிய விஷயம். அவர், தெளிவோடு நல்ல திட்டங்களோடு தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அவரின் முதல் அரசியல் கட்சி மாநாடு வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இடையில் பலத்த மழை பெய்ததால், இந்த மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா ? என்ற கேள்வியும் இருந்து வந்தது. ஆனால், அதையும் மீறி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த விஜய் உட்பட அனைவரும் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
இதையடுத்து, விஜய்யின் முதல் அரசியல் கட்சி மாநாட்டிற்கு யார் யார் வருகை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் யார் யார் வருவார்கள் என ரசிகர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு சில ரசிகர்கள் விஜய்யின் மாநாட்டிற்கு அஜித் வந்தால் சிறப்பாக இருக்குமே என கூறி வருகின்றனர். அப்படி வரவில்லை என்றாலும் விஜய்க்கு அஜித் தன் வாழ்த்துக்களை கூறினாலும், சிறப்பாக இருக்கும் என்பதே சில ரசிகர்களின் ஆசையாக உள்ளது.
அஜித்தின் ஃபேவரைட் வாசகமே ‘வாழு, வாழ விடு’ என்பது தானே அனைவருக்குமான வாழ்த்து மொழி..!
thalapathy vijay tvk party meeting; visit in ajithkumar.?