குபேரா படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
குபேரா படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.

amazon prime in kubera movie ott rights
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனுஷ் ஹீரோவாக குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜூன் மாதம் இருபதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இந்த படத்தில் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் 50 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

amazon prime in kubera movie ott rights