டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் 20 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பாதுகாப்பு மற்றும் அதிகாரிகள் சிறந்த எதிர்காலத்தை தேடி வரும் ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தின் ஆபத்தான பயணத்தை பற்றி காட்டுகிறது.
இந்தத் திரைப்படம் வெளியாகி 20 நாட்கள் முடிந்த நிலையில் இதுவரை உலக அளவில் 78 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
