வசூலில் தூள் கிளப்பும் அமரன்.. நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது.

Amaran Movie 4th Day Box Office Collection Update
Amaran Movie 4th Day Box Office Collection Update

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில், சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை கொண்டாடி வரும் ரசிகர்கள் தற்போது நான்கு நாட்களில் 138 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.

Amaran Movie 4th Day Box Office Collection Update
Amaran Movie 4th Day Box Office Collection Update