அமரன் படம் 3-வது நாள் வசூல்: கமல் மேலும் மகிழ்ச்சி
மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன் அவர் நடிப்பில் வந்துள்ள அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. தற்போது இப்படத்தின் கலெக்சன் விவரம் குறித்து பார்ப்போம்..
அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் கெரியரில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்றால் அது அமரன் தான். இப்படத்திற்காக கட்டுமஸ்தான் உடற்கட்டுக்கு மாறியதோடு, துப்பாக்கி சுடுதல் பயிற்சியும் பெற்றும் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் நாளிலேயே ரூ.42 கோடி வசூலித்திருந்தது. சிவகார்த்தி கெரியரில் முதல் நாளிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக அமரன் இருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் நாளில் 35 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம், மூன்றாம் நாளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி, வசூல் மழை தொடர்ந்துள்ளது.
அந்த வகையில் அமரன் திரைப்படம் மூன்றாம் நாளில் ரூ.30 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் கெரியரில் இதுவரை அதிக வசூல் செய்த படம் என்றால் அது டான் தான். அப்படம் 125 கோடி வசூலித்திருந்தது. அந்த வசூலை அமரன் படம் நான்கே நாட்களில் எட்டிவிடும் என கூறப்படுகிறது.
அமரன் படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மைல்கல் படமாக அமைய உள்ளது என்பது அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் மூலமே தெரியவருகிறது.
இப்படத்தை தயாரித்த உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கலெக்சன் நிரம்பி வழியும் அளவுக்கு அமரன் படம் லாபத்தை அள்ளித்தந்து வருவதாக சினிமா வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது. இன்றும் விடுமுறை தினம் என்பதால், அமரன் பட வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போராடினால் உண்டு பொற்காலம் தானே.!