தளபதி விஜய்க்கு லியோ-2 கதை ரெடி: லோகேஷ் கனகராஜ் தகவல்
கைதி, விக்ரம், மற்றும் லியோ ஆகிய திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விரைவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘பென்ஸ்’ படமும் வரவுள்ளது. மேலும், தனது LCUவின் குறும்படத்தையும் விரைவில அவர் வெளியிட உள்ளார்.
இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்க தொடங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி சில கால ஓய்வுக்கு பிறகு, தற்பொழுது மீண்டும் படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மீதம் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அந்த திரைப்படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார்.
இந்த சூழலில், கடந்த 2023ம் ஆண்டு பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அந்த திரைப்படம் வெற்றி படமாக மாறியது.
இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இப்போது வாய்ப்புகள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. காரணம், தளபதி விஜய் தற்போது தன்னுடைய அரசியல் பணியை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் தளபதி விஜய் ஓகே என்று சொன்னால் லியோ 2 கதை ரெடியாக இருக்கிறது, தான் அந்த திரைப்படத்தை எடுக்க முழுமையாக தயாராக இருப்பதாக லோகேஷ் கூறியுள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இரண்டு முக்கிய தகவல்களையும் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ள நெல்சனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஒரு கதை அம்சத்தை தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் பார்ப்பதும் தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறி, கவினுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை கூறியிருக்கிறார்.
அப்ப, பிளடி பெக்கர் இரண்டாம் பாகமும் வரலாம்.!