உங்கள கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதி வேண்டும் என ரசிகர் கேட்ட கேள்விக்கு அமலா பால் பதில் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகையாக உருவெடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். சோலோ நாயகியாகவும் பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் விஜயை காதல் திருமணம் செய்து ஒரே வருடத்தில் விவாகரத்து செய்தார்.

அதன் பின்னர் தற்போது வரை சிங்கிளாக இருந்து வரும் அமலாபால் ரசிகர்களுடன் உரையாட அப்போது ஒருவர் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன தகுதி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள அமலாபால் நான் என்னையே புரிந்து கொள்ளும் பயணத்தில் இருக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்விக்கு இன்னும் பதிலை கண்டுபிடிக்கவில்லை. பதிலை கண்டுபிடித்த பிறகு நானே சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.