Ajith Vijay Trolls
அஜித், விஜய் ரசிகர்கள் மாறி மாறி தல தளபதியை அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதனால் கேவலமான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளன.

தமிழ் சினிமாவின் இன்றைய இரு பெரும் தூண்களாக வலம் வருபவர்கள் அஜித், விஜய். இவர்களுக்கு இடையே நல்ல நட்பும் ஒற்றுமையும் இருந்தாலும் அது இவர்களின் ரசிகர்களுக்கு மத்தியில் இருப்பதில்லை.

இரு தரப்பினரும் எப்போதும் ஒருவரை ஒருவர் மாறி மாறி ட்ரோல் செய்து கொள்வதையே வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கின்றனர்.

சில சமயங்களில் இந்த ட்ரோல்கள் கேவலத்தின் உச்சத்தையும் தொடுவது உண்டு. தற்போது அப்படி தான் விஜய் ரசிகர்கள் #RemoveSareeofActorAJITH என்ற ஹேஸ்டேக்கில் அஜித்தை ட்ரோல் செய்கின்றனர்.

பதிலுக்கு அஜித் ரசிகர்கள் #RemoveBraOfActorVIJAY என்ற ஹேஸ்டேக்கில் விஜயை ட்ரோல் செய்கின்றனர். இதில் இன்னும் அதிர்ச்சிகரமான விசியம் என்னவென்றால் இந்த இரண்டு ஹேஸ்டேகிலும் லட்சத்திற்க்கும் அதிகமான டிவீட்கள் பதிவாகியுள்ளன.

ரசிகர்களின் இப்படியான கீழ்த்தரமான செயல்களால் இறுதியில் அசிங்கப்படுவது என்னவோ அவர்களின் பேவரைட் நடிகர்கள் தான் என்பதை எப்போது தான் உணர போகிறார்களோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.