திரிஷாவை நினைத்து அஜித் பாடும் ‘ச்சீ ச்சீ ச்சீ… வைரலாகும் லவ் ஸாங்
எல்லாம் ஏஜ தொழில் நுட்பம் படுத்தும் பாடுதான். இது, நாளைய காதலர் தின ஸ்பெஷலாக வைரலாகி வருகிறது. இது பற்றிய காதல் கூத்து பார்ப்போம்..
கடந்த 2020-ம் ஆண்டு வெளியான ஒடியா பாடல் ச்சீ ச்சீ ச்சீ. அதாவது, தன் காதலியை நினைத்து ஹீரோ சோகமாக பாடிய பாடல். ச்சீ ச்சீ ச்சீ பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் கழித்து தற்போது வேற லெவலில் வைரலாகி வருகிறது. முதலில் ஒடியா மொழியில் தான் வரைலானது.
பிறகு, நம் அமுதத் தமிழ் நெஞ்சங்கள் அதை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள். அதுவும் அதே பாடகர் சத்யாவின் குரலில் தமிழில் பாடி வெளியிட்டு இருக்கிறார்கள்.
காதலில் தோல்வி அடைந்த உள்ளங்கள் எல்லாம் காதலர் தினம் நெருங்கும் இந்த நேரத்தில், ச்சீ ச்சீ ச்சீ பாடலை ஷேர் செய்து தங்கள் சோகக் கதையை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், ச்சீ ச்சீ ச்சீ பாடலை அஜித் குமார், திரிஷாவை வைத்து ஏஜ தொழில் நுட்பம் மூலம் உருவாக்கி வெளியிட்டு உள்ளார்கள்.
என்னமா வொர்க் பண்ணிருக்காங்க.., ஒடியா நடிகரின் அதே ஹேர்ஸ்டைலில் அஜித் குமார் அப்டி பொருந்தியிருக்கிறார். திரிஷா வழக்கம் போல அழகாக ஜொலிக்கிறார்.
<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”ta” dir=”ltr”>பாட்ட மேட்ச் பண்ணிங்க, வாய்சயும் மேட்ச் பண்ணிங்க அதெல்லாம் விஷயம் இல்லடா ஆனா ஹேர் ஸ்டைலையும் மேட்ச் பண்ணிங்க பாத்தீங்களா… <br>அங்க தான்டா நிக்கிறீங்க👋 <a href=”https://t.co/O9HevQIu78″>pic.twitter.com/O9HevQIu78</a></p>— 𝗙𝗶𝗹𝗺 𝗙𝗼𝗼𝗱 𝗙𝘂𝗻 & 𝗙𝗮𝗰𝘁 (@FilmFoodFunFact) <a href=”https://twitter.com/FilmFoodFunFact/status/1889627005118759096?ref_src=twsrc%5Etfw”>February 12, 2025</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>
‘விடாமுயற்சி’ படத்தில் தனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக அஜித் குமாரிடம் கூறி, விவாகரத்து கேட்பார் திரிஷா.
கட்டிய மனைவி, நான் வேறு ஒருவருடன் போகப் போகிறேன், விவாகரத்து கொடு என கேட்பதை விட பெரிய கொடுமை இருக்க முடியாது. அந்த சிட்ச்சுவேஷன் ‘ச்சீ ச்சீ ச்சீ’ பாடலுடன் சிங்க் ஆகிவிட்டது.
“மனசை மறந்து அவன் கூட போனியே.. தங்கமான என் மனச மறந்து அவன் கூட போனியே.. நான் பணக்காரன் இல்லனு தெரிஞ்சு அவன் கூட போனியே..” என அஜித் பாட, அதை கேட்டு திரிஷா ஃபீல் பண்ணும் அந்த ஏஐ வீடியோ செம..!
அந்த வீடியோவை அஜித் குமாரும், திரிஷாவும் பார்த்தால் கூட ரசித்து, சிரிப்பார்கள். அந்த அளவுக்கு தரமான சம்பவம் எனலாம்.