Ajith Political

Ajith Political : வா தலைவா.. தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொடுக்க உன்னால் மட்டும் தான் முடியும் என பிரபல இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை.. அரசியலை பொறுத்தவரை தவறாமல் வாக்களிப்பதே என்னுடைய பொதுஜன கடமை.

என் பெயரையும் என்னுடைய ரசிகர்கள் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை மூலம் தெளிவாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநரான சுசீந்திரன், தமிழகத்தில் 40 ஆண்டு கால திராவிட ஆட்சியை மாற்றி நல்ல மாற்றத்தை உங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும். இது தான் 100 % சரியான தருணம். வா தலைவா என குறிப்பிட்டுள்ளார்.

சுசீந்திரன் இந்த ட்வீட் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் அஜித்தின் மனம் மாறி அரசியலுக்கு வருவாராம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.