Ajith Birthday Special
Ajith Birthday Special

Ajith Birthday Special – விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாளில் இப்படம் வெளிவராவிட்டாலும் அன்றைய தினம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஒரு அப்டேட் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

ஒன்று அது மோஷன் போஸ்டராகவோ அல்லது முதல் பாடல் பற்றிய அப்டேட்டாகவோ இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

அண்மையில் இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூர், அஜித் இப்படத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பதாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.