அஜித் 64 : வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி அதாவது அஜித் 64 படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.இது மட்டுமில்லாமல் இந்த படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
