நான் சோர்வாக இருந்தால், அக்காவிடம் தான் முதலில் போனில் பேசுவேன்: ஐஸ்வர்யா ஓபன் டாக்

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உடனான தனது நட்பு குறித்து முதல் முறையாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியதாவது:
கனிமொழி எம்.பி.யின் அரசியல் பயணத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது, அவர்..
‘பொதுவாக நான் எங்குமே செல்லமாட்டேன். ஆனால், கனிமொழி அக்காவுக்காக நான் எங்கு வேண்டுமானாலும் வந்து விடுவேன். எங்களுடையது 20 வருட நட்பு எங்களுடையது விவரிக்க முடியாத ஒரு உறவு.
நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் நான் முதலில் போன் பண்ணி பேசுவது அக்காவிடம் தான். அரசியல் மேடைகளிலும், நாடாளுமன்றத்திலும் அவர் பேசியதை பார்த்து, இன்னும் நல்லா பேசனும் என்றெல்லாம் சொல்லி இருக்கிறேன்.
எனக்கு நட்பு வட்டாரம் ரொம்ப கம்மி. அவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த நட்பு வாட்டாரத்தில் ஒருவர் தான் கனிமொழி அக்கா. அவங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என்னுடைய கோவில் வழிகாட்டி அவங்க தான்.
நான் எந்த ஊருக்கு, எந்த கோவிலுக்கு போனாலும் அக்காவின் ஆளுங்க தான் என்னை பத்திரமா கூட்டிட்டு போவாங்க.
அக்கா என்னுடைய எந்த படமும் பார்த்ததில்லை. ஆனால், அவங்களுக்கு கமர்ஷியல் படங்கள் ரொம்ப பிடிக்கும். பார்க்க தான் அவங்க சீரியஸ் ஆன ஆள் மாதிரி இருப்பாங்க. அவங்க சிரிச்சா அவ்வளவு அழகா இருக்கும். ஆனால் சிரிக்க மாட்டாங்க. அவங்க இன்னும் நிறைய சிரிக்க வேண்டும்.
எப்பவுமே சிரித்துக் கொண்டே இருக்கவேண்டும் என ஆசைப்படுவதாக அந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ‘இவங்க ரெண்டு பேரும் 20 வருட ஃப்ரெண்ட்ஸா.. இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. என கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
