கோபிக்கு வந்த நெஞ்சு வலி,பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல்?நடக்கபோவது என்ன?
கோபிக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா கோபியிடம் பாக்கியாவிற்கு ஆதரவாக பேசி உங்க ரெண்டு பேருக்குள்ளே இருக்கிற பிரச்சனையால நாங்க தான் பாதிக்கிறோம்.
அம்மா ரொம்ப பாவம் தாத்தா சொன்னதுக்காகவும் பாட்டி செஞ்சதுக்காகவும் நீங்க அம்மாவ தண்டிக்கிறது எப்படி கரெக்டா இருக்கும் என்று கேட்க கோபி குற்ற உணர்ச்சியில் இருக்கிறார். கோபி திருந்தி நல்லவராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியான ப்ரோமோவில் கோபி, இனியா பேசியதை நினைத்து கார் ஓட்டிக் கொண்டே வர அவருக்கு நெஞ்சு வலி ஏற்படுகிறது. ராதிகாவுக்கு போன் பண்ண ராதிகா பார்த்துவிட்டு எடுக்காமல் இருக்கிறார்.
உடனே பாக்யாவிற்கு ஃபோன் பண்ணுகிறார். பாக்யா போனை எடுக்கப் போகிறாரா? இல்லையா? கோபியை காப்பாற்றுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.