Pushpa 2

அடுத்த வாரம் அரசியலில் குதிக்கிறேன்: திவ்யா சத்யராஜ் அதிரடி முடிவு

நடிகர் சத்யராஜின் மகன் சிபி, சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். மகள் திவ்யா இதோ அரசியலில் இறங்கப் போகிறார். இது குறித்துப் பார்ப்போம்..

ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ், மகிழ்மதி என்கிற பெயரில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்நிறுவனம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை வழங்கி வருகிறார் திவ்யா சத்யராஜ். அவருக்கு தற்போது 31 வயது ஆகிறது. திருமணம் ஆகவில்லை.

சினிமா நடிகர்களின் வாரிசு என்றாலே அவர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வருவது வழக்கம் தான். அவ்வகையில், திவ்யாவுக்கும் சினிமாவில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வர, மறுத்துவிட்டேன் என்கிறார்.

தன்னுடைய கனவை நிறைவேற்றத்தான் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருக்கிறேன். நல்ல அரசியல்வாதியாக வர வேண்டும் என்பது எனது கனவாக இருந்து வருகிறது’ என்கிறார்.

தற்போது திவ்யாவின் இந்த நீண்ட நாள் கனவு நனவாக உள்ளது. அவர் அடுத்த வாரம் அரசியலில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் எந்த கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட உள்ளார் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போதே திவ்யா சத்யராஜுக்கு பாஜக தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆனால், அதை அவர் நிராகரித்து விட்டார். இதனால், பாஜகவில் அவர் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள கட்சிகளே அவரின் தேர்வாக இருக்கும்.

திவ்யாவின் தாய் மகேஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் தகவல் அண்மையில் தெரிய வந்தது. இதை அறிந்து அதிர்ச்சியான ரசிகர்கள், அவர் தாய் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். தன் தாய் கோமாவில் இருந்தாலும் அவர் மீண்டு வருவார் என்கிற நம்பிக்கையோடு சிகிச்சை அளித்து வருவதாக திவ்யா சத்யராஜ் கூறியிருந்தார்.

தாயின் ஆரோக்கியமும், திவ்யாவின் அரசியல் பயணமும் நலமாகட்டும்.!

divya sathyaraj all set to enter politics soon