Aditi Balan Childhood Photos

அருவி ஹீரோயின் அதிதி பாலன் தன்னுடைய சின்ன வயசு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Aditi Balan Childhood Photos : தமிழ் சினிமாவில் அருண் புருசோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். இந்த படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இத்திரைப்படத்தில் அதிதி பாலனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. எஸ் ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் இருந்த அதிதி ஒரு குட்டி ஸ்டோரி என்ற அந்தலாஜி படத்தில் நலன் குமாரசாமி இயக்கிய ஆடலும் பாடலும் என்ற பகுதியில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து இருந்தார். வேறொரு பெண் போல தன்னுடைய கணவர் விஜய் சேதுபதியிடம் பேசி அவரை சிக்க வைத்து அறையும் காட்சி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து நவரசா வெப் சீரிஸ் தொடரிலும் அதிதி பாலன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கும் பகுதியை இயக்குனர் வசந்த் இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது அதிதி பாலன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்போதே செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை தன்னுடைய சகோதரர் ஒருவர் எடுத்ததாக தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிதி பால் அண்ணா இது அப்போதே இவ்வளவு ஸ்டைலாக போஸ் கொடுத்து இருக்காரே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CMMYsMijlyN/?igshid=6acspq6cuiqd https://www.instagram.com/p/CMMXdQLjuih/?igshid=1wmxaeamvsbmm