
நாயகி என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்ற முறையை மாற்றி காட்டிய 3 நடிகைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.
இந்திய திரையுலகில் நடிகையாக இருப்பவர்கள் பெரும்பாலும் வாய்ப்புகளுக்காக படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி விடுகின்றனர்.
குறிப்பாக நாயகியாக நடிப்பவர்களுக்கு நடிப்பின் ஒரு அங்கம் கவர்ச்சியாகவே திரை உலகினர் பார்க்கின்றனர். ஆனால் இதை உடைத்து கவர்ச்சி இல்லாமல் நடிப்பால் கவர்ந்த 3 நடிகைகள் உள்ளனர்.
அவர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- சாய் பல்லவி :
டாக்டருக்கு படிப்புல சாய் பல்லவி சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிக்க வந்துள்ளார். ஆனால் படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என உறுதியாக சொல்லி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
- அபர்ணா தாஸ் :
மலையாள படங்களின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து டாடா படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இவரும் எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என சொல்லி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
- நித்யா மேனன் :
இதுவரை பல படங்களில் நடித்துள்ள நித்யா மேனனும் படங்களில் கவர்ச்சிக்கு முற்றிலுமாக நோ சொல்லி அடக்கமான உடைகளை அணிந்து நடித்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவர்கள் இல்லாமல் கவர்ச்சி இல்லாமல் நடிப்பால் உங்களை கவர்ந்த நடிகைகள் யார் என்பதை கமெண்டில் சொல்லுங்க.
