Web Ads

பணத்துக்காக பொய் சொல்கிறாரா திரிஷா?: வைரலாகும் பிரபல பாடகரின் கருத்து

திரிஷாவை சம்பந்தப்படுத்தி வைரலாகும் நிகழ்வு குறித்துப் பார்ப்போம்..

‘தல’ அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, ‘குட் பேட் அக்லீ’ படத்திலும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

மேலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக ‘விஸ்வம்பரா’ படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 45-வது படத்திலும், மோகன்லால் நடிப்பில் ‘ராம்’ படத்திலும் திரிஷா ஹீரோயினாக வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் திரிஷாவின் டுவிட்டர் சில தினங்களுக்கு முன்பு, கிரிப்டோ கரன்சி தொடர்பான சில விளம்பரங்கள் வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சில விளம்பர பதிவுகள் வெளியான நிலையில், திரிஷா தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. அதனை மீட்கும் பணிகள் நடந்து வருவதாக கூறினார்.

இந்நிலையில், பிரபல அமெரிக்க பாடகர் கான்யோ வெஸ்ட் கூறிய கருத்துடன், தற்போது திரிஷாவை ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அதாவது, பாடகர் கான்வே வெஸ்ட், ‘சோசியல் மீடியாவில் சம்பந்தமே இல்லாமல் சில பொருட்களை பிரபலங்கள் புரமோட் செய்வதாகவும், அதன் பின்னர் தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டதாக விளக்கம் கொடுக்கின்றனர். இப்படி செய்வதால், அவர்களுக்கு மிகப்பெரிய சன்மானம் கிடைக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

இந்த பாடகரின் கருத்துடன் திரிஷாவின் டுவிட்டர் ஹேக் செய்யப்பட்ட சம்பவமும் பொருந்தி போவதால், திரிஷா பணத்துக்காக பொய் சொல்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் திரிஷா? பார்க்கலாம்..!