முழுமதி அவளது முகமாகும்.. பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!

பிக் பாஸ் சௌந்தர்யா லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியிட்டு உள்ளார்.

Actress Soundariya nanjundan Latest Photos Update
Actress Soundariya nanjundan Latest Photos Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். சில மாதங்களுக்கு முன் சீசன் 8 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா. இவரது குழந்தைத்தனமான சிரிப்பும் பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக முறை சௌந்தர்யா நாமினேட் செய்யப்படும் ரசிகர்கள் அவரை காப்பாற்றி ரன்னராக்கி இருந்தனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது புடவையில் மங்களகரமாக விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் வர்ணித்தும் வருகின்றனர்.