Web Ads

குட் பேட் அக்லி படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

குட் பேட் அக்லி படத்தை இயக்க ஆதிக் ரவிச்சந்திரன் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

The salary Adhik Ravichandran received for directing the film Good Bad Ugly
The salary Adhik Ravichandran received for directing the film Good Bad Ugly

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் நேற்று டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ப்ரீ புக்கிங்கில் ஒரு பக்கம் 10 கோடியை நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர் 7 கோடி முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The salary Adhik Ravichandran received for directing the film Good Bad Ugly
The salary Adhik Ravichandran received for directing the film Good Bad Ugly