இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி தெரியுமா?
இட்லி கடை படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

dhanush in idly kadai movie ott release update
தமிழ் சினிமாவில் ஹீரோ இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் தனுஷ் ஹீரோவாக பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்த இவர் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவரது 52 ஆவது படமான இட்லி கடை படத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
மேலும் நித்யா மேனன், அருண் விஜய் ,ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை netflix நிறுவனம் 42 கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dhanush in idly kadai movie ott release update