Pushpa 2

தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருப்பது ஏன்?: நடிகை சமந்தா விளக்கம்..

முன்னணி நடிகையாக இருந்தும், முன்னணி நடிகர்களுடன் நடிக்க வரும் வாய்ப்பை மறுப்பது ஏன்? என்பது குறித்து சமந்தா கூறியதை காண்போம்..

தமிழ் சினிமாவில், நடிகை சமந்தா ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்கு பிறகு நடிக்கவில்லை. காரணம் என்ன? ஆனால், ஒரு வெப்தொடரில் நடிக்க ஒப்பதமாகி இருக்கிறார்.

கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம் கூட வரவில்லை. ஆனால், ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சிடாடல்- ஹனி பன்னி’ வெப்தொடர் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

முன்னதாக ராஜ் மற்றும் டி.கே. இயக்கிய ‘தி ஃபேமிலி மேன் 2 வெப்தொடரிலும் நடித்து பாராட்டு பெற்றார். தற்போது அதே இயக்குநர்கள் இயக்கும் ‘ரக்த் பிரம்மாண்ட்’ தொடரில் நடிக்கிறார்.

தொடர்ந்து ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் நடிக்க முக்கிய காரணம், புதிய கதையும், முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமும் தான். இதனால், பிற படங்களில் நடிக்காமல் இருக்கிறேன்.

‘தி ஃபேமிலி மேன் 2 தொடரில் நான் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்தேன். சிடாடல் தொடரிலும் அப்படித் தான். ரக்த் பிரம்மாண்டிலும் என் கதாபாத்திரம் வித்தியாசமானது. மேலும் மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் வேண்டும் என என்னை ஆசைப்பட வைத்து விட்டார்கள். வித்தியாசமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன்.

பெரிய ஹீரோக்களின் படங்களில் பெயருக்கு வந்து டூயட் பாடிவிட்டு போகும் ஹீரோயினாக இனி நடிக்க விரும்பவில்லை. வெயிட்டான கதாபாத்திரங்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். அப்படியொரு கேரக்டர் வரவில்லை என்றால் பட வாய்ப்பை ஏற்கும் ஐடியாவில் இல்லை’ என்றார் சமந்தா.

 

actress samantha in director raj and tk film work
actress samantha in director raj and tk film work