நடிகை ஓவியாவுக்கு நேர்ந்த வறண்ட காலம்: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்

ஓவியா, தற்போது புதிய ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அந்த நிலையைப் பற்றிப் பார்ப்போம்..
களவாணி, மன்மதன் அம்பு, மூடர்கூடம், மதயானைக் கூட்டம், யாமிருக்க பயமே என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியாவுக்கு, வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. பின்னர்
பிக் பாஸ் சீசன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, காதலனுடன் ஓவியா உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக்கள் இணையத்தில் திடீரென லீக்கான நிலையில், ஓவியா டிரெண்டானார். அதுதொடர்பான கேள்விகளுக்கு ஓவியா அளித்தபதில்களும், அந்த வீடியோ டீப் ஃபேக் வீடியோ என்றும் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு போடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், 2024-ம் ஆண்டு ‘பூமர் அங்கிள்’ படத்தில் யோகிபாபுவுடன் நடித்தார். பின்னர், பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், யூடியூப் வெப்சீரிஸிலும்
நடித்தார்.
தற்போது, புதிய படம் ஒன்றின் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளார். கிராப் வெட்டிய தலையுடன் சேலை அணிந்துகொண்டு நீண்ட கை வைத்த ஜாக்கெட் எல்லாம் அணிந்து, ஆளே அடையாளம் தெரியாமல், குறிப்பாக வழக்கமான கிளாமர் ட்ரெஸ் அணியாமல், வித்தியாசமாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கு வந்த நிலையை எண்ணி ஃபீலிங்ஸாய் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த புதிய படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பதையெல்லாம் ஓவியா சொன்னால்தான் தெரியும் எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.