நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்: எங்கே தெரியுமா?

நடிகைகளும் அவர்களுக்கு கட்டிய கோயில்களும் பற்றிப் பார்ப்போம்..

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தார். இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கு உள்ள கிரேஸ் குறைந்தபாடில்லை. அப்படி அவர் மீது உயிரையே வைத்திருக்கு ரசிகர் ஒருவர் அவருக்காக கோவில் கட்டியிருக்கிறார்.

அதாவது, ஆந்திர மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது சொந்த ஊரில் தன் வீட்டின் அருகில் சமந்தாவின் சிலை அடங்கிய கோவிலை கடந்த 2023-ம் ஆண்டு கட்டினார். அதே ஆண்டு சமந்தா பிறந்த நாளையொட்டி திறக்கப்பட்டது.

முன்னதாக, தமிழ்நாட்டில் குஷ்பு, ஹன்சிகா, நமீதா போன்ற நடிகைகளுக்கு கோவில் கட்டப்பட்ட சம்பவங்கள் நடந்தன என்பது தெரிந்ததே. அந்த வரிசையில் சமந்தாவும் இணைந்திருக்கிறார். சமந்தா ரசிகரின் இந்த செயலை சிலர் பாராட்டினாலும், இதுபோன்ற பைத்தியக்கார ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்களா எனவும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

சமந்தா திரைப்பயணத்தை பொறுத்தவரை அவர் அண்மையில் டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, படங்களை தயாரித்து வருகிறார். அந்த படங்களில் சமந்தாவே நடித்தும் வருகிறார்.

அவ்வகையில் சுபம் என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், தற்போது ‘பங்காரம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

நடிகைகளுக்கு சிலை வைக்கும் ரசிகர்கள் பின்னணியில், ஒருவகையில் காரியக்காரர்களாகவும் இருக்கிறார்கள் எனவும் விமர்சிக்கப்படுகிறது.