சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா?: நித்யா மேனன் தேடலுக்கு, இதோ தீர்வு..
சினிமா தவிர, வேறு துறையில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற நித்யா மேனனின் பெரிய தேடலுக்கு? இணையவாசிகள் வழங்கியுள்ள தீர்வு பற்றிப் பார்ப்போம்.. வாங்க..
கீர்த்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜெயம் ரவி-நித்யா மேனன் காதலில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கான புரொமோஷன் பணியிலிருந்த நித்யா மேனன் கூறியதாவது: ‘எனக்கு பிடிக்காத துறை என்றால் திரைத்துறைதான். இப்போதும் கூட வேறு ஏதேனும் துறையில் வாய்ப்பு கிடைத்தால் போய்விடுவேன். ஒரு நார்மலான வாழ்க்கையை வாழவே விரும்புகிறேன்.
எனக்கு பயணம் செய்வது ரொம்ப பிடிக்கும். ஆகையால், பைலட்டாக விரும்பினேன். ஒரு நடிகையாக இருக்கும்போது சுதந்திரமாக இருப்பதை மறந்துவிட வேண்டும். பார்க்கில் போய் நடப்பது ரொம்பவே பிடிக்கும். அதெல்லாம் இப்போது முடியாது.
சில சமயங்களில் இதெல்லாம் நமக்கு தேவையா என்று தோன்றும். தேசிய விருது கிடைப்பதற்கு முன்பு சத்தமே இல்லாமல் எங்கேயாவது போய்விடலாம் என நினைத்தேன். அப்போதுதான் தேசிய விருது கிடைத்தது’ என்றார். நித்யாவின் இந்த மனநிலை தற்போது இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், நார்மலான நடைமுறை வாழ்க்கையில், நல்லதொரு சாமான்ய மனிதரா பார்த்து கல்யாணம் செய்து, பிறக்கிற குழந்தை முகத்தை பாருங்க. புத்துலகு தெரியும்!’ என்கிற நெட்டிசன்ஸின் நன்னெறிகள் வைரலாகி வருகிறது. இதை, ஃபாலோ பண்ணுவாரா நித்யா.?