இந்தியாவிலேயே அதிக பார்வைகளை பெற்று ‘டாக்ஸிக்’ திரைப்பட கிளிம்ப்ஸ் மெகா சாதனை..
‘புஷ்பா-2’ படத்தின் சாதனையை ‘டாக்ஸிக்’ பட கிளிம்ஸ் முறியடித்துள்ள அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்..
யாஷ், ‘கேஜிஎஃப்’ படம் மூலமும், அல்லு அர்ஜுன் ‘புஷ்பா’ படம் மூலமாகவும் இந்திய அளவில் நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர் கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர் யாஷ் நடிப்பில் தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் கேங்ஸ்டராக நடிக்கிறார் யாஷ்.
இந்நிலையில், யாஷின் பிறந்த நாளன்று ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில் பப்பிற்கு சென்று அழகிகளுடன் ஆட்டம் போடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருவதோடு சில சாதனைகளையும் தகர்த்தெறிந்துள்ளது.
‘டாக்ஸிக்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தான் தற்போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட கிளிம்ஸ் வீடியோ என்கிற சாதனையை படைத்திருக்கிறது. இதற்கு முன்னர் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியானபோது, அதன் இந்தி வெர்ஷன் 24 மணிநேரத்தில் 27.67 மில்லியன் பார்வைகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில், அந்த சாதனையை டாக்ஸிக் பட கிளிம்ப்ஸ் வீடியோ 13 மணிநேரத்தில் முறியடித்து மாஸ் காட்டியுள்ளது.
டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியான 13 மணிநேரத்திலேயே புஷ்பா 2 படத்தைவிட அதிக பார்வைகளை பெற்றுவிட்டது. தற்போது அதன் வியூஸ் 50 மில்லியனை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தியாவிலேயே 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற கிளிம்ப்ஸ் வீடியோ என்கிற பெருமையை டாக்ஸிக் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பெற்றுள்ளது. இதனால் படக்குழுவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கிளிம்ப்ஸ் வீடியோவுக்கே இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளதால் டாக்ஸிக் படத்தின் மீதான் எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் உள்ளது.
இந்தப் படம் பற்றி கீது மோகன்தாஸ் கூறும்போது, ‘இது வித்தியாசமான கதையை கொண்ட படம். யாஷ், தனித்துவமான மனிதர். அவரது புத்திசாலித்தனத்தை கவனித்துள்ளேன். சினிமா மீதான அவர் ஆர்வம் உத்வேகம் அளிக்கும். ‘டாக்ஸிக்’ மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டு வரும். இது பார்ப்பதற்கு மட்டுமல்ல, உணரப்பட வேண்டிய திரைப்படம்’ என தெரிவித்துள்ளார்.