நடிகர் ரஜினிகாந்தின் நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கையில் வைத்திருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க முக்கிய கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ரஜினியுடன் ஒரு மகிழ்ச்சியான புகைப்படம்!!… குஷ்பூ வெளியிட்ட ட்விட்டர் பதிவு வைரல்!.

இந்நிலையில் நடிகை குஷ்பூ திடீரென்று நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் வெளியிட்டு ஒரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், one and only Superstarஐ நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி, ஒரு டீயும் கொஞ்சம் சிரிப்பும் என்னை மகிழ வைத்துள்ளது என்று கூறியுள்ளார், மேலும் உங்கள் பொன்னான நேரத்தை என்னுடன் செலவிட்டமைக்கு நன்றி சார். பார்க்கவே அமேசிங்கா இருக்கீங்க என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவிற்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.