கயாடு லோஹர் சொன்ன வார்த்தையால், விஜய்-தனுஷ் ரசிகர்கள் கலாட்டா..
‘இதனால், அழகாக இருப்பவர்கள் பேசும் வார்த்தையில் கவனமாய் இருத்தல் நன்று’ என அறிவுறுத்தப்படுகிறது. அதாவது கயாடு மேட்டருக்கு வருவோம்..
‘டிராகன்’ பட வெற்றியால் கயாடு லோஹர் செம குஷியில் உலா வருகிறார். தற்போது ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கல்லூரி விழாவில் கலந்துகொண்ட கயாடு லோஹர் மாணவிகளுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ வைரலானது.
அப்போது சிலர் அவரிடம் உங்க செலிபிரிட்டி கிரஷ் யார் கேட்க, வெட்கத்துடன் அவர், தளபதி விஜய் தான் என்னோட செலிபிரிட்டி கிரஷ். அவர், நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படம் ‘தெறி’ என்றும் தெரிவித்தார். இதனால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் கயாடுவை வர்ணித்து தள்ளினர். இணையத்தில் அனல் பறந்தது.
இச்சூழலில், ரசிகர்களை கயாடு இப்படி ஏமாற்றலாமா? என நெட்டிசன்ஸ் கேள்வி கேட்கத் தொடங்கி உள்ளனர். அதாவது, செலிபிரட்டி கிரஷ் விஜய்னு சொன்ன அதே கயாடு தான், இன்ஸ்டாகிராம் உரையாடலில், ‘உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்’ என ரசிகர் ஒருவர் கேட்க, ‘தனுஷ் தான் எனக்கு பிடிக்கும், வேறு யாருக்கும் இடமில்லை’ என தெரிவித்துள்ளார்.
இதை கவனித்த நெட்டிசன்கள் ‘மாற்றி மாற்றிப் பேசி கயாடு லோஹர் மாட்டிக்கொண்டார்’ என தெரிவிக்கின்றனர். இதற்கு வீடியோ ஆதாரத்தையும் காண்பித்து கலாய்க்க தொடங்கியுள்ளனர்.
மேலும், “என்னம்மா இப்படி பண்றீங்களே” எனவும் கமெண்ட் பட்டன்களை தெறிக்க விட்டுள்ளனர். ‘விடுங்கப்பா, நம்ம கயாடு லோஹர் தான, பொய் சொன்னாலும் அழகாதான் இருக்கு’ என கருணையோடு ரசிகர்கள் ஆதரவும் தெரிப்பது வைரலாகி தெறிக்கிறது. எப்படியோ, விஜய்-தனுஷ் ரசிகர்கள் சமாதானம் ஆனா சரிதான்.
