விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 பட 2-ம் பாகம் கதை பற்றி ஐசரி கணேஷ் அப்டேட்..
காதல் பேசிய படமான 96 படத்தின் 2-ம் பாகம் பற்றிய தகவல் பார்ப்போம்..
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த 96 திரைப்படம் காதலை உணர்வுபூர்வமாக சொல்லி, அனைவரையும் கவர்ந்து, பெரிய வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது இப்படத்தின் 2-ம் பாகத்தை இயக்க உள்ளார் பிரேம்குமார். ஆனால், முதல் பாகத்தை போல இந்த படம் ஒரு காதல் கதையாக இருக்காது என ஏற்கனவே கூறியுள்ளார்.
இந்தப் படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 96 படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை கேட்ட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கதையை கேட்ட அடுத்த நாளே இயக்குனரை அழைத்து அவருக்கு 5 பவுன் தங்க நகையை பரிசாக கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி, தனது சினிமா வாழ்க்கையில் இப்படியொரு கதையை கேட்டதே இல்லை. இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என்றும் சொல்லியிருக்கிறார்.
இயக்குநர் பிரேம் குமார் 96 படத்தின் ரீமேக்காக- ஜானு என்ற தெலுங்கு படத்தையும் தமிழில் அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‘மெய்யழகன்’ படத்தையும் இயக்கியுள்ளார். ‘மெய்யழகன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், 96 படத்தின் 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கிறார்களா? என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.
