சரியான நேரத்தில் என்னை காப்பாற்றியவர் கணவர்: பாடகி கல்பனா விளக்கம்..
பாடகி கல்பனா வெளியிட்டுள்ள தகவல்கள் காண்போம்..
‘பாடகி கல்பனா ராகவேந்தர் தற்கொலை முயற்சி செய்ய முயன்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்’ என செய்திகள் பரவின. இந்நிலையில், குணமடைந்து வீடு திரும்பிய கல்பனா தனக்கு நடந்தது என்னவென்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது,
‘என்னை பற்றியும், என் கணவரை பற்றியும் தவறான வதந்தி பரவியிருக்கிறது. அதைப் பற்றி விளக்கம் அளிக்கவே இந்த வீடியோ.
இந்த வயதில் நான் LLB, ph.d மற்றும் நிறைய படித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் இசையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். இதனால், ஸ்ட்ரெஸ் அதிகமாக பல ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை. இதற்காக மருத்துவர்களிடம் சென்றபோது மருந்து கொடுத்தார்கள்.
அன்று நான் கூடுதல் டோஸ் எடுத்ததால் நுரையீரல் இன்ஃபெக்சன் ஆகி சுயநினைவை இழந்துவிட்டேன். இன்று நான் உயிரோடு திரும்பி வந்து பேச என் கணவர் அன்று பட்ட பாடு தான் காரணம்.
என்னை காப்பாற்ற அவர் பட்ட கஷ்டம் தான் காரணம். அப்போ அவர் வெளியூரில் இருந்தார். சரியான நேரத்தில் போலீசார் உதவியை நாடி என்னை காப்பாற்றினார். அதனால், சரியான நேரத்தில் என்னை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தார்கள். அதனால், உயிர் பிழைத்தேன்.
எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என் வாழ்க்கையின் அருமையான விஷயம் என் கணவர் பிரசாத் பிரபாகர். அழகான, அன்பான, பொறுப்பான தயா எனக்கு மகளாக கிடைத்தது சிறந்த விஷயம்.
அனைவரும் காண்பித்த அன்புக்கு நன்றி. நான் 100 வருஷம் வாழ்வேன். விரைவில் பாட்டு மூலமாக உங்களை சந்திப்பேன் என்றார்.
தன் அம்மா இசை கெரியருடன் படித்து வருவதால், ஸ்ட்ரெஸ்ஸில் தூக்கமில்லாமல் தவிக்கிறார் என கல்பனாவின் மகள் தயா தெரிவித்தார். இந்நிலையில் கல்பனாவும் அதை கூறி தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
