குடும்பத்துடன் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடிய காஜல் அகர்வால்..!

Web Ads

குடும்பத்துடன் கர்வா சவுத் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

actress kajal agarwal latest photoshoot photos
actress kajal agarwal latest photoshoot photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.பழனி படத்தின் மூலம் அறிமுகமான இவர் சரோஜா, பொம்மலாட்டம் ,நான் மகான் அல்ல ,ஜில்லா ,துப்பாக்கி, மாற்றான், பிசினஸ்மேன், ஆல் இன் ஆல் அழகுராஜா, மெர்சல், விவேகம் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது கர்வா சவுத் பண்டிகையை தனது குடும்பத்துடன் கொண்டாடிய தருணங்களை புகைப்படம் எடுத்து அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

இதில் குடும்பம் குழந்தை கணவர் என அனைவருடனும் சேர்ந்து இந்த பண்டிகையை கொண்டாடியுள்ளார் கணவரின் நீண்ட ஆயுள் மற்றும் நல்வாழ்வுக்காக பெண்கள் விரதம் இருந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.