சனாதனமா? திராவிடமா?: அரசியல் முழங்கும் விக்ராந்த் பட டீசர்..

Web Ads

‘எது வேண்டும் என்பதை ஓட்டுப் போடுபவர் முடிவு செய்யட்டும்’ என உரைக்கும் டீசர் பற்றிப் பார்ப்போம்..

‘கற்க கசடற’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான விக்ராந்த், கடைசியாக ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘வில்’ படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள படம் என தெரிகிறது. சோனியா அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும் மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தை ஃபூட் ஸ்டெப்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

டீசரின் வரும் ஒரு காட்சியில் ‘சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இரண்டும் வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீயோ, நானோ, அவர்களோ கிடையாது. ஓட்டு போடுறவன் தான் முடிவு செய்ய வேண்டும்’ என்ற வசனங்கள் பேசப்படுகிறது.

அவ்வகையில், இப்படம் பாலிடிக்ஸ் பின்னணியில் ஒரு திரில்லர் மூவியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வசனம் வைரலாகி வருகிறது.

actor vikranth will teaser out now
actor vikranth will teaser out now