ஜோவிகா விஜயகுமார் என்ற தன் மகளின் பெயருக்கு, நடிகை வனிதா விளக்கம்..

Web Ads

‘என் குழந்தைகளின் தந்தையானவர் என்னை தப்பா பேசி எனக்கு பிரச்சினை செய்தார்’ என தெரிவித்துள்ளார் வனிதா. இது பற்றிய தகவல்கள் காண்போம்..

பிக் பாஸ் மூலம் கிடைத்த பணத்தை வைத்து ஜோவிகா விஜயகுமார் ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்கிற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ஜோவிகாவின் அம்மா வனிதா இயக்கி உள்ளார். வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் நடித்துள்ளார். இப்படம், ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ஷகீலா, பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், நடிகை கிரண் உள்பட பலர் கலந்துகொண்டனர். இயக்குனர் வசந்த பாலனும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவில் வனிதா பேசுகையில்,

‘சோசியல் மீடியாவில் வரும் கமெண்டுகளை எல்லாம் படிப்பேன். ஆனால், கண்டுக்க மாட்டேன். ஜோவிகா பிக்பாஸில் இருந்தபோது அவர் பெயருக்கு பின் ஏன் விஜயகுமார் என்று கேட்டனர். அதற்கு இந்த மேடையில் பதிலளிக்கிறேன். இந்த படம் உருவானதற்கான கதையும் அதுதான்.

என் பெயர் வனிதா விஜயகுமார், இன்னைக்கு வரைக்கும் என்பெயரை மாற்றவில்லை. எனக்கு கல்யாணமாகி மகன் பிறந்து மூன்று ஆண்டுகள் ஆன பின்னர், என் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் வந்தது.

அப்போதைய சூழலில், என்னால் இங்கு இருக்க முடியவில்லை. நான் எங்கு சென்றாலும் பிரச்சினையாகவே இருந்தது. என்னைப் பற்றி தப்பா பேசி, என் குழந்தைகளின் தந்தை பிரச்சினை செய்தார். அவர் யார் என்பதை சொல்லமாட்டேன். ஜோவிகா என் வயிற்றில் இருக்கும்போது, நான் இங்க இருக்க முடியாத சூழல் வந்தது.

அப்போது என் அம்மா என்னை அமெரிக்காவுக்கு செல்லச் சொன்னார். நான் நிம்மதியா குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய அப்பா தான் என்னை அமெரிக்கா அனுப்பி வைத்தார்.

ஒரு பொண்ணு கர்ப்பமாக இருக்கும்போது, அம்மா கூட இருப்பதைவிட புருஷன் கூட இருக்கனும். ஆனா, நான் தனியா கஷ்டப்பட்டேன். அமெரிக்காவில் குழந்தை பிறந்த உடனே அவர்களின் பெயரை சொல்ல வேண்டும். அப்போது என் கணவர் பெயரை நான் என் மகள் பெயருடன் சேர்க்க விரும்பவில்லை.

நான் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட என்னுடைய அப்பாவின் பெயர் தான் அப்போது நியாபகத்துக்கு வந்தது. அதனால், ஜோவிகா விஜயகுமார் என பெயரிட்டதாக வனிதா கூறியுள்ளார்.

vanitha vijayakumar shares story jovika birth
vanitha vijayakumar shares story jovika birth